Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

7. காந்திஜியின் வாக்கு

காத்மா காந்திஜி தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நேரம் அது. திண்டுக்கல்லில் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு ஒட்டன்சத்திரம் வழியாக பழனிக்குக் செல்வது என்றபடி காந்திஜியின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

காந்திஜியைக் கண்ணாறக் கண்டு நேரில் அவரைத் தரிசிக்க வேண்டும் என்ற தணியாத ஆசையோடு அந்த வட்டாரத்து மக்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்களது ஆசை நிறைவேரும் தருணம் இப்போது வந்து விட்டது.

திண்டுக்கல் நகரில் கூட்டத்தை முடித்து விட்டு ரயிலில் பழனி நகரை நோக்கி காந்திஜி வரும் போது ஒட்டன்சத்திரம் ஏன்ற ஊர் வழியாகத் தானே வரவேண்டும்? அந்த ரயிலை ஒட்டன்சத்திரதில் நிறுத்தி மகாத்மாவை நேரில் கண்டுவிடலாம் என ஒட்டன் சத்திரத்து வட்டார மக்கள் சொல்லவொணா கொள்ளை ஆசையோடு இருந்தனர்.

ஆனால் காந்திஜியின் பயண்த்திட்டத்தின்படி, அவர் ஏறிப்புறப்பட்டு வரும் ரயில் ஒட்டன்சத்திரத்தில் நிற்காது. நேராகப் பழனி நகருக்குச் செல்ல வேண்டும் என்பதே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பயணத் திட்டமாகும்.

இந்த அறிவிப்பை ஏற்கனவே கேட்டறிந்த மக்கள் கவலை கொள்ள ஆரம்பித்தனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏக்கம் அவர்களுக்கு இருந்தபோதிலும் மனதில் நம்பிக்கையைச் சுமந்தவாறே ஒட்டன்சத்திரம் நோக்கிச் செல்ல்த் தொடங்கின்ர்.

தாராபுரத்து நாயகனாக விளங்கிய வடிவேலு அவர்களும் தன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு ஒட்டன்சத்திரத்துக்குப் போனார்.

ஒட்டன்சத்திரத்தில் இருந்த காங்கிரஸ் கமிட்டியினர் வடிவேலு அவர்களைச் சந்தித்து, அய்யா இந்த பகுதி மக்கள் அனைவரும் மகாத்மாவை நேரில் காண வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள். அவர் செல்லும் ரயிலை ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்வதற்குத் தாங்கள் எப்படியாவது ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டன்ர்.

ரயில் பாதை அருகில் உள்ள திடலில் பெரிய கூட்டத்தைக் கூட்டுங்கள் நான் ரயிலை நிறுத்துகிறேன் என்று கூறிய வடிவேல் அவர்கள் மறுவார்த்தை பேசவில்லை. மக்களை திரட்ட அனைவரும் பம்பரம் போலச் சுழன்று அசுரவேகத்தில் செயல்படத் தொடங்கினர்.

திண்டுக்கல் நகரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அமைதியையும் கட்டுப்பாட்டையும் மகாத்மா காந்திஜியினால் காண முடியவில்லை. கூட்டத்தில் கூச்சல் ஏற்பட்ட காரணத்தினால் மகாத்மா அதிக நேரம் பேசாமல் சீக்கிரமே தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

திண்டுக்கல் நகரிலிருந்து ரயில் பழனி நகரை நோக்கிப் புறப்பட்டு வந்தது. ஒட்டன்சத்திரத்தில் காந்திஜியைப் பார்ப்பதற்குக் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பாத்து, வடிவேலு அவர்கள், அன்புடையீர் நமது மகாத்மா அவர்கள் அமைதியையும் கட்டுப்பாட்டையும் பெரிதும் விரும்புவார். நீங்கள் அமைதியாக இருப்பீர்களானால் இங்கே ரயிலை நிறுத்தி மகாத்மாவை நேரில் பார்க்கலாம் என்று உரக்கப் பேசினார்.

ரயில் ஒட்டன்சத்திரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பெருங்கூட்டத்தைக் கண்ட ரயில் வேகத்தைக் குறைத்தது.

திண்டுக்கல் கூட்ட அனுபவத்தின் காரணமாக, ரயிலை நிறுத்தாதீர்கள், கை மட்டும் அசைப்பேன் என்று காந்திஜி கண்டிப்புடன் கூறியிருந்தார். ஒட்டன்சத்திரத்துக் கூட்டத்துக்கும் இது பொருந்தத் தானே செய்யும்?

ரயில் மிகமிகக் குறைந்த வேகத்தோடு ஒட்டன்சத்திரத்தை நெருங்கியபோது, அந்தப் பெருங்கூட்டத்தைப் பார்த்த, மகாத்மாவுடன் பயண்ம் மேற்கொண்டிருந்த ராஜாஜி அவர்கள், ரயில் ஜன்னலை மெல்லத் திற்ந்து இங்கே புரோகிராம் இல்லையே என்று தலையை வெளியே நீட்டியபடி கூட்டத்தின்ரைப் பார்த்துச் சொன்னார்.

இதற்க்கிடையே மகாத்மா வெளியே எட்டிப் பார்த்தார். மக்கள்திரள் அவரது கண்களில் தென்பட்டது. உடனே ரயிலை நிறுத்தும்படி காந்திஜி உத்திரவிட்டார். ரயில் நின்றது.

ரயிலின் கதவை இணைத்தபடி அங்கே பெரிய மேடை ஒன்று போடப்பட்டது. கூட்டத்தைக் கண்ட மகாத்மாவுக்கு சந்தோஷம் ஒரு பக்கம் வியப்பு இன்னொரு பக்கம்.

மேடையில் நின்ற்படி கூட்டத்தினரைப் பார்த்து சில வார்த்தைகள் பேசிய காந்திஜி இறுதியாக, என் பொதுவாழ்வில் இன்று வரை இது போன்ற அமைதியான கட்டுப்பாடு மிக்க கூட்டத்தை நான் பார்த்ததில்லை. இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவரைப் போல் ஊருக்கு 100 பேர் இருந்தால் இந்தியாவிற்க்கு சுதந்திரம் உடனே பெற்றுவிட முடியும் என்று கூறிவிட்டு, மக்களை பார்த்துக் கையசைத்தபடி விடைபெற்றுச் சென்றார்.

தங்கள் வாழ்நாளில் மகாத்மாவை எப்படியெனும் ஒருமுறை நேரில் காணவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த மக்கள், தங்களது ஆர்வம் பூர்த்தியாகி விட்ட முழுமன நிறைவோடு தங்களது வீட்டை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தன்ர்.

இந்த சம்பவத்தைப் பற்றி அடுத்த நாளில் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. ஒட்டன்சத்திரத்தில் மகாத்மா கல்ந்து கொண்டு பேசிய மாபெரும் கூட்டத்தில் பெரியவர்கள் சத்தமின்றி இருந்தது பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால் குழந்தைகள் கூட ஒசையின்றி இருந்தது மிகமிக அதிசயம் என்று பத்திரிக்கைகள் பாராட்டி எழுதியிருந்தன.

கட்டுப்பாடும் அமைதியும் மிக்க இத்தகைய சிறப்பானதொரு கூட்டத்தை அணிதிரட்டியதில் வடிவேலு அவர்களுக்குப் பெரும் பங்கு இருந்தது. ஊருக்கு நூரு பேர் தேவை என்ற கூறிய காந்திஜியின் வாக்கு வடிவேலு அவர்களுக்கு அப்படியே பொருந்தும் என்றே கூறவேண்டும்.

6. உரம் ஏற்றிய சிறைவாசம்

விடுதலைக்காகப் போராடுகின்றவர்களை மனோரீதியாக உணர்வை மழுங்கடித்து அடிமை உணர்வை நிலைநிறுத்தி வைப்பதற்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் போராளிகளைச் சிறையில் அடைத்து வைத்து சித்ரவதைகளையும் கட்டவிழ்த்து விட்டது.

உத்திரவாதமான அரசு வேலையை உதறித் தள்ளிவிட்டு, நாட்டின் விடுதலைக்காகப் போராடுவதற்கு துணிச்சலுடன் அர்ப்பணிப்பு உணர்வோடு புறப்பட்டு விட்ட வடிவேலு அவர்களைப் பொறுத்த வரை சிறைவாசம் அவருக்கு வேதனைக் கூடமாகத் தென்படவில்லை. சாதனைகள் பல நிகழ்த்துவதற்கான உணர்வுகளுக்கு உரம் ஏற்றும் இடமாகவே சிறைக் கூடங்களை அவர் கருதினார்.

தாராபுரத்தில் மதுபானக் கடை மறியலில் ஈடுபட்டார். போலிஸ் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறித்தியது. 3- 1 – 1931ல் ஈரோடு சப்டிவிஷனல் மாஜிஸ்திரேட், வடிவேலு அவர்களுக்கு ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீஈப்புக் கூறினார். கோவை மற்றும் கண்ணனூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். இந்த சிறை வாசத்தின் போது, கோவை ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு நெடுங்காலமாக காரியதரிசியாக இருந்து செயல்பட்ட திரு.கே. சுப்ரி என்று அழைக்கப்பட்ட சுப்ரமணியம், சதாசிவம் முதலிய தலைவர்களின் தொடர்பு வடிவேலு அவர்களுக்குக் கிடைத்தது. இந்தத் தொடர்பு அவருக்கு சிறைவாசத்தின்போது மேலும் ஊக்கம் அளித்தது. தொடர்ந்து தேசியப் பணியில் ஈடுபடவேண்டும் என்ற வேட்கையை வளர்த்து விட்டது.

காங்கிரஸ் பேரியக்கம் 1932ம் ஆண்டில் சட்ட மறுப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியது. மதுபானக் கடை மறியல் போராட்டத்தில் பங்கு பெற்றதற்காக ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை பெற்று, பின்னர் விடுதலையாகி வீடு திரும்பிய வடிவேலு அவர்கள் சட்ட மறுப்புப் போராட்டத்திலும் பங்கு பெற்றார். அந்நிய துணி பகிஷ்காரம், மதுபானக் கடை மறியல் ஆகிய இவற்றில் கல்ந்து கொண்டமைக்காக ஈரோடு நீதிமன்ற்ம் 5 – 2 – 1932ல் ஒரு ஆண்டு நாங்கு மாதங்கள் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனை காலத்தை கோவை சிறைச்சாலையில் கழித்தார். சிறைக்கு மீண்டும் மீண்டும் செல்லச் செல்ல வடிவேலு அவர்களுக்கு உள்ளம் சோர்ந்து போய்விடவில்லை. உரம் பெற்று நெஞ்சில் உறுதி பெற்று நின்றார். 27-4-1933ம் தேதியன்று கோவை சிறையி இருந்து விடுதலையானார்.

விடுதலையாகி வெளியே வந்ததும் சற்று ஒய்வு எடுக்கலாமே என்று எண்ணம் அவருக்குத் தோன்றவில்லை.

கதர், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகிய நிர்மாண்ப் பணிகளில் அவர் இறங்கினார். தாராபுரம் வட்டாரத்தில் காங்கிரஸ் பிரச்சாரத்திலும் முழு மூச்சுடன் இற்ங்கினார். அந்த வட்டாரத்தில் அவரது கால்படாத கிராமங்களே இல்லை எனலாம். மக்களைச் சந்தித்து உரையாடியதிலும், அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டதிலும் அவர் மேலும் மேலும்  தெம்பும் உறுதியும் பெற்றார். தேசத்துக்கான அவரது அர்ப்பணிப்பு உண்ர்வு முன்னைக் காட்டிலும் வேகம் கூடியிருந்தது.

1939ல் இரண்டாவது உலக மகாயுத்தம் மூண்டது. பிரிட்டன், அமெரிக்கா, சோவியத்யூனியன் ஒரு அணியாகவும். ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் மற்றொர் அணியாகவும் அமைந்தது. உலகப் போர்க்களம் உலக மக்களை மிரட்டிக் கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலைமை. இந்தியாவை காலனியாக்கி ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேய ஏகாதிவத்தியம் இந்தியாவைக் தனித்திருக்க விடவில்லை. இந்தியாவையும் உலகப் போரில் ஈடுபடுத்தியது ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இந்தப் போக்கைக் கண்டித்து காங்கிரஸ் பேரியக்கம் தீவிரப் பிரச்சார இயக்கத்தைத் துவக்கியது. நாடெங்கும் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரங்கள் அனல் தெறிக்க நடந்த வண்ணமிருந்தன.

வடிவேலு அவர்கள் இந்த யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்தார். யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களைக் குற்றவாளிகளாகக் கருதி ஆங்கிலேய அரசு கைது நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. வடிவேலு அவர்கள் வழக்கம் போல கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். ஈரோடு சப்டிவிஷனல் மாஜிஸ்திரேட் கோர்டில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அலிப்புரம் சிறைச்சாலையில் ஒரு வருட காலம் அடைக்கப்பட்டார்.

தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்த சில மாதங்களுக்குள்ளாகவே வடிவேலு அவர்களை எதிர்நோக்கி மற்றுமொரு போரட்டம் காத்துக் கொண்டிருந்தது.

1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கம் முழுவீச்சில் தொடங்கப்பட்டது. நாடெங்கிலும் ஆர்பாட்டங்கள், கிளர்ச்சிகள் வெடித்தன. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போரட்டத்தில் வடிவேல் அவர்கள், எப்பொழுதும் போலவே வரிந்து கட்டிக் கொண்டு முன்னணியில் நின்றார். 1942ல் தாராபுரம் வட்டாரத்தில் நடைபெற்ற புரட்சிக்கு வித்திட்டவரே வடிவேலு அவர்கள். ஆங்கிலேய அரசு அவரை அவ்வளவு சுலபத்தில் வெளியில் நடமாட விட்டுவிடுமா என்ன? கைது செய்யப்பட்டு 18-9-1943 முதல் 15-11-1943 வரை தாராபுரம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

வடிவேலு அவர்களைப் பொறுத்த வரையிலும் சிறைச்சாலைகள் அவருக்குச் சித்திரச் சோலைகளாகவும், சிந்தனைக் கூடங்களாகவும் அமைந்திருந்தன. சிறைச்சாலைகள் சோர்வுக்குப் பதிலாக மன உறுதியையும், சோம்பேறித்-தனத்துக்குப் பதிலாக சுறுசுறுப்பையும் அவருக்குத் தந்தன.

நாடு சுதந்திரம் பெறும் வரையிலும் அவரது பெரும்பாலான நாட்கள் சிறையிலேயே கழிந்தன. சுமார் 12 ஆண்டு அவரது சிறைவாசம் அவருக்கு உரம் ஏற்றி, அவரை வளர்த்தது.

5. அரசியல் பிரவேசம்

ந்திய தேசியக் காங்கிரசின் 43வது மகாசபைக் கூட்டம் 1928ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கல்கத்தாவில் கூடியது. இந்த மாநாட்டுக்குப் பிறகு விடுதலைப் போராட்டம் புது உத்வேகம் பெற்றது.

பகத்சிங்கின் வீரமரணம், சிறையில் உண்ணவிரதமிருந்து உயிர் துறந்த வீரர் யதிந்தாஸின் தியாகம், காகோரி சதி வழக்கு, லாகூர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரத் சதி வழக்கு, தென்னிந்திய ரயில்வே சதி வழக்கு ஆகியவை காரணமாக இந்தக் காலகட்டத்தில் இந்திய தேசிய விடுதலை இயக்கம் சூடு பிடித்து பலவித பரிமாண்ங்களுடன் விளங்யது. நாடெங்கும் பதட்ட நலை உருவாகிக் கொண்டிருந்தது.

அகில இந்திய தேசிய காங்கிரசின் அகில இந்திய 44வது மாநாடு 1929ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடியது. டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு லாகூர் நதிக்கரையில் பூடண சுதந்திரமே எங்கள் லட்சியம் என்று காங்கிரஸ் மகா சபையின் தலைவர் பண்டித ஜவகர்லால் நேரு பிரிட்டிஷ் ஆட்சியின் மீது போர்ப்பிரகடனம் செய்தார்.

இதனையொட்டி 1930ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் முதன் முதலாக பூரண சுதந்திர நாள் தேசமெங்கும் கொண்டாடப்பட்டது. பெருநகரங்கள் மட்டுமின்றி குக்கிராமங்களும் சுதந்திரதின விழாக்கோலம் பூண்டிருந்தன. இந்த நாள் இந்திய மக்களை எழுச்சியூட்டிய நாளாக அமைந்தது ஆனால் பிரிட்டிஷ் ஏகதிபத்தியத்திற்கோ எரிச்சல் ஊட்டிய நாளாக அமைந்து விட்டது.

பாரத நாடே புத்துயிர் பெற்ற இந்தத்திருநாளில், ஆங்கில மோஸ்தர் உடையகள் தரித்து, நகராட்சியில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக தலை நிமிர்ந்து, ஜன செல்வாக்கோர்டு நின்றிருந்த பா.து. வடிவேலு அவர்கள் கோபவேசம் கொண்டார்.

தான் செய்து வந்த ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வேலையை உதறி தள்ளினார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

1930ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி காலையில் தாராபுரத்தில் உள்ள அனுமந்தராயன் கோயில் முன் மைதானத்தில் காங்கிரஸ் கொடியேற்றி வைத்து அந்நிய துணி பகிஷ்கரிப்பு இயக்கத்தை துவக்கினார். பெரிய சொக்கப்பானை கொளுத்தப்பட்டது. தான் அணிந்திருந்த ஆங்கில மோஸ்தர் உடைகளைக் கழற்றி அதனைக் தீயிட்டுக் கொளுத்தினார். அவரைத் தொடர்ந்து பல பிரபல வக்கில்களும், மாணவர்களும் தங்கள் அந்நியத் துணிகளை அத்தீயில் போட்டனர்.

கதர் இயக்க்ம், கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிக்கடைகளின் முன் மறியல் என்று தொடர் போராட்டங்கள் வடிவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றன.

மெளனப் பூமியில் ஒர் எரிமலை நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தது. வடிவேலு அவர்களால் எரிய விடப்பட்ட நெருப்பு மக்க்ள் மனதில் இருந்த அடிமை உணர்வைக் கருக்கியது. சுதந்திர தாகத்தைச் சுடர் விடச் செய்தது.

காங்கிரஸ் பிரச்சாரத்தில் தீவிரமாக இற்ங்கினார். கிராமங்கள் தோறும் பயணம் மேற்கொண்டார். பலதரப்பு மக்க்ளையும் சந்தித்து காங்கிரஸ் இயக்கத்துக்து ஆதரவு தரும்படி வேண்டுகோள் விடுத்தார். காங்கிரஸின் இலட்சியங்களை அவர்களிடம் எடுத்துரைத்தார்.

வடிவேலு அவர்கள் அந்த மெளன பூமியில் மாவீரனாகத் தோன்றி மக்களின் அன்பைப் பெற்றார்.

பாலக்காட்டில் உள்ள விக்டோரியா கல்லுரியில் தனது இண்டர் மீடியட் படிப்பை முடித்தார் வடிவேலு. படிப்புக்கேற்ற வேலையில் அமர்ந்த வடிவேலு அவர்கள், தனது புலமையை மேலும் விருத்தி செய்யும் பொருட்டு வேறு மொழிகளையும் கற்கத் தோடங்கினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், ஊருது, சமஸ்கிருதம் ஆகிய மொழகளில் புலமை மிக்கவராக வடிவேலு விளங்கினார்.

கல்வி கற்றதன் பயன் என்ன? நாம் பெற்ற அறிவைப் பிறருக்கு ஊட்டுவது ஒரு அம்சம். அந்த அறிவைப் பயம்படுத்தி தான் புரிந்து கொண்ட நாட்டு நடப்புகளை அடுத்தவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவது இன்னொரு அம்சம். தான் பெற்ற கல்வியைக் கொண்டு ஒரு வேலையில் அமர்ந்து வருமானம் தேடி தன் குடும்பத்தை காத்து வருதல் மூன்றாவது அம்சம்.

தாராபுரம் நகராட்சியில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வேலையில் சேர்ந்தார். செய்யும் தொழிலை தெய்வமாக கருதிய வடிவேலு அவர்கள், அத்தொழிலில் நேர்மையும் கண்டிப்பும் காட்டினார்.

செய்யும் தொழிலில் எவருக்குமே தலைவண்ங்காத கலாச்சார மரபை வடிவேலு அவர்கள் பின்பற்றி வந்தார். நிலபுலம், ஆள் அம்பு சகிதம் படைத்த பெரிய மனிதர்களின் விரோதத்தையும் அவரது நேர்மை சம்ப்தித்துத் தந்தது.

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியைக் கட்டாமல் நீண்ட காலமாக ஏமாற்றி வந்த பெரிய தனக்காரர்களுக்கு வடிவேலு அவர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினார். ஆனால் அதே நேரத்தில் சாதாரண மக்கள் அவரைத் தங்களின் காவல் தெய்வமாகக் கருதினார்கள்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் அவருக்கு இருந்த புலமை போற்றுதலுக்குரிய ஒன்றகும். அரசுக் சட்டங்களைப் பற்றிய அனைத்து விபரங்களும் அவருக்கு அத்துபடி. அவருக்கிருந்த சட்டம் பற்றிய ஞானம் தான் அவரை மக்களின் வழிக்காட்டியாக உயர்த்தி விட்டது. மக்களிடம் செல்வாக்கைப் பெற்று தந்த அவரது புலமையும், செல்வாக்கும் பின்னாளில் அவரது அரசியல் பிரவேசத்தின் போது அவருக்குப் பெரிதும் பயன்பட்டது.

3. வடிவேலு குடும்பம்

கேரள மாநிலம் ஒலவக் கோட்டில் வாழ்கையைத் தொடங்கிய வடிவேலு அவர்களுக்கு வாழ்க்கைத் துணைவி அமைந்த இடம் தமிழகத்தைச் சேர்ந்த தாரபுரம். கேரளாவில் இருந்த பெரிய மர வியாபாரி பா.நா.துரைசாமிப்பிள்ளை தனது மகனுக்குத் தாராபுரத்தில் பெண் எடுத்து விட்டார். அது முதல் வடிவேலு தாராபுரத்துக்கு வந்து சேர்ந்த மாப்பிள்ளை என அவ்வூர் மக்கள் அழைக்கத் தொடங்கினர்.

தாராபுரத்துப் பெண்மணியும், வடிவேலுவின் மனைவியுமான செல்வநாயகிம்மாள் தனது கணவன் செயலுக்கு உறுதுணையாகவே எப்போதும் இருந்து வந்தார். அவர்கள் இருவரும் மனமொத்து வாழ்க்கையில் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.

வெள்ளைக்காரன் ஸ்டேன்ஸ் கம்பெனியை விலக்கி வைத்துவிட்டு, தாராபுரத்துக்கு மருமகனாக வந்த வடிவேலு, தாராபுரம் நகராட்சியில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வேலையில் சேர்ந்தார். தொழிலும் நல்ல தொழில் வருமானத்துக்கும் நல்ல உத்திரவாதம். கணவனும் மனைவியும் களிப்புற்று வாழ்ந்தனர். வாரிசுகள் தோன்றத் தொடங்கின.

அளவான குடும்பமே ஆரோக்கியம் மிக்கது, சிறிய குடும்பமே சிறப்புத் தருவது என்ற உபதேசங்கள் உலா வராத காலம் அது. தனக்கு பின்னால் தனக்கும், தன் உற்றார் உறவினர்களுக்கும், தன் நாட்டுக்கும் எத்தனை பேர் உறுதுணையாக நிற்பர் என்ற கேள்வியே குடும்பங்களின் வாரிசுகளைத் தீர்மானித்திருந்த காலம் அது. அதனால் எண்ணிக்கையை விட எண்ணங்களே குடும்ப வாழ்வில் தம்பதியர் மனதில் கோலோச்சி நின்றன. இங்கே வரம்புகளை விட வாரிசுகளே முதலிடம் பெற்றிருந்தனர்.

வடிவேலு செல்வநாயகியம்மாள் தம்பதியர்க்கு வாரிசுகள் ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள். இன்றைய கண்ணோட்டத்தில் இது ஆச்சரியமாகக் கூடத் தோன்றலாம். ஆனால் அன்றைய நிலைமையில் இது அவசியத் தேவை என்று கருதப்பட்டிருக்கக் கூடும்.

அத்தம்பதியினர் வழியொற்றி, அவர்தம் நினைவுகளை இவ்வுலகிற்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் அவர்களின் வாரிசுகள் பத்துப்பேர் ஆவர்.

அவர்கள், வ. விஜயபாஸ்கரன், பத்மலோசனி, வ. பூபேந்திரநாத், சகுந்தலா, வ. ஜிதேந்திரநாத், மங்கையர்கரசி, வ. சண்முகசுந்திரம், வ. மோகனகிருஷ்ணன், காஞ்சனமாலா, சசிகலா, ஆகியோர்.

வடிவேலு செல்வநாயகியம்மாள் பெற்றெடுத்த இந்தப் பத்துப் பேர்களும் அரசு மற்றும் பொதுப்பணிகளில் தங்களது தாய் தந்தையர் பெயரை எட்டுத் திக்கும் நிலைநாட்டப் பணி புரிந்து வருகிறார்கள் என்பது கண்கூடு. புலிக்குப் பிறந்த எந்த ஒரு குட்டியும் பூனையாகிவிடவில்லை. இது அவர்கள் பெற்றெடுத்த வாரிசுகளின் விஷயத்தில் மட்டுமல்ல அவர்களது வாரிசுகள் பெற்றெடுத்த பேரன், பேத்திகளும் தங்களது தாத்தா, பாட்டிகளின் அடிச்சுவட்டில் வந்தவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு உறுப்பினர்களைக் கொண்ட தனது குடும்பம் வடிவேலுவுக்கு ஒரு சுமையாகவோ அல்லது தாங்க முடியாத பாரமாகவோ தோன்றியிருக்க வாய்ப்பில்லை. நாட்டு மக்களையே தன் குடும்பமாக நினைத்துப் பாடுபட்ட அவருக்கு இந்தப் பத்துப்பேர் சுமையாக இருந்திருக்க முடியாது. தனக்குப் பக்கத் துணை என்றே அவர் கருதியிருந்தார்.

2. பதவி ஒரு தூசு

கேரள மாநிலம் ஒலவக்கோட்டில் மர வியாபாரத் தொழிலில் கொடி கட்டிப் பறந்தவர் பா.நா.துரைசாமி என்பவர். அவருடன் எல்லா வகையிலும் ஒத்துப் போகக் கூடிய மனைவியாக சுந்தரம்மாள் அமைந்தது அவருக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் ஆகும்.

பா.நா.துரைசாமி பிள்ளை சுந்தரம்மாள் ஆகிய தம்பதியர்க்குப் பிறந்த பிள்ளைகளில் ஒருவர்தான் பா.து.வடிவேலுபிள்ளை என்பவர். 28.11.1903ல் இவர் பிறந்தார்.

புத்தி கூர்மையுள்ள தன் மகனைப் படிக்க வைத்து முன்னேற்றம் காணச் செய்ய வேண்டும் என்று பா.நா.துரைசாமிப்பிள்ளை விரும்பினார். ஒலவக்கோடு பகுதிலேயே ஆரம்ப மற்றும் உயர்நிலைப் படிப்பை முடித்த பா.து.வடிவேலு பாலக்காடு விக்ட்டோரியா கல்லூரியில் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.

கல்லூரிப்படிப்பை முடித்த பிறகு தனது மகனுக்கு வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டார், அவரது தந்தை பா.ந. துரைசாமிபிள்ளை அவர்கள்.

பா.து.வடிவேலுவின் கல்லூரிப் படிப்பு முடிந்தது. கோயம்புத்தூரில் இருந்த ஆங்கிலேயரின் கம்பெனியான ஸ்டேன்ஸ் கம்பெனியில் வடிவேலு வேலைக்கு சேர்ந்தார். அன்றைய தினம் கோவை மாவட்டத்தில் பூனாச்சி மலையில் ஸ்டேன்ஸ்  எஸ்டேட் ஒன்று ஆங்கிலேயர்க்குச் சொந்தமாக இருந்தது. அந்த எஸ்டேட்டில் அதிகாரியாக பா.து.வடிவேலு பணியாற்றினார். இந்தக் கம்பெனியில் தான் நீண்ட காலம் பணி ஆற்றப் போவதாக பா.து.வடிவேலு எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் நடப்பு நிலைமைகளோ அவரது ஆசையில் மண்ணைப்போடுவாதாக இருந்தது. ஸ்டேன்ஸ் கம்பெனியின் தலைமை அலுவலகம் கோவை நகரத்தில் இருந்தது.

சுதந்திரப் போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த நேரம். வேலை நிமித்தமாக, தான் வேலை செய்து வந்த எஸ்டேட்டிலிருந்து, கோவை நகரில் இருந்து ஸ்டேன்ஸ் கம்பெனி தலைமையகத்திற்கு ஒருமுறை பா.து.வடிவேலு வந்திருந்தார். கோவைத் தெருக்களில் அவர் கண்ட காட்சி அவரை உலுக்கி எடுத்துவிட்டது. மனசாட்சி பேசத் தொடங்கியது.

அங்கே அவர் கண்ட காட்சி அவரது உள்ளத்தைப் பெரிதும் பாதித்தது. சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய கண்டன ஊர்வலத்தைப் போலீசார் தடியடி கொண்டு தாக்கினர். தொண்டர்களை பூட்ஸ் காலால் மிதித்து சித்ரவதைக்கு உள்ளாக்கினர். இந்தக் கோரக் காட்சியைக் கண்ட வடிவேலுப் பிள்ளை அதிர்ச்சி அடைந்தார்; ஆவேசம் கொண்டார். இனி ஒரு போதும் வெள்ளைக்காரன் கம்பெனியில் வேலை பார்ப்பதில்லை என்று அக்கணமே முடிவு செய்தார். வேலையை உதறி எறிந்தார். நாட்டு விடுதலைக்குப் போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இனணத்துக் கொண்டார்.

வெள்ளைக்காரன் கம்பெனியில் வேலை செய்வதும், அவனுக்கு அடிமையாக இருப்பதும் ஒன்றுதான் என்ற உணர்வு வடிவேல் பிள்ளையின் மனதில் தோன்றியது. இந்திய மண்ணிலிருந்து அந்நிய நாட்டவரான் ஆங்கிலேயரை விரட்டுவதே தனது முதல் பணி என அவர் முடிவு செய்தார். சொந்த சுகத்துக்காக வேண்டி எப்பதவியிலும் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் எண்ணியதில்லை. பதவியா? பாரத மக்களா? என்ற கேள்வி எழுந்த நேரத்தில் மக்களுக்காகப் பதவியைக் துறந்தார். அவரைப் பொருத்த வரையில் பதவி ஒரு தூசு.

1. மௌன பூமியில் …

ன்றுபட்டிருந்த கோவை மாவட்டத்தில் தாராபுரம் என்பது பழம் பெருமை உடைய ஊர். இவ்வூருக்கு விராடபுரம் என்ற பெயர் உண்டு. விராட நாட்டின் தலைநகராக இந்த ஊர் இருந்தது என்பர். கொங்கு மண்டல சதகம் இந்த ஊரை காந்தபுரம் ஏன்று குறிப்பிடுகின்றது, தாராகபுரி, குந்தலை விண்ணகரம், ஸ்காந்தபுரம் ஆகிய பெயர்களும் இவ்வூருக்கு வழங்கி வந்திருக்கின்றன. தலைகாட்டு கங்கர்கள் இங்கு ஆட்சி புரிந்து வந்தனர். ரோமாபுரி நாணயங்கள் இங்கு அகப்பட்டுள்ளன. வெளியுலகத் தொடர்பில் இந்த ஊர் முக்கிய பங்கு வகித்தது என்பதற்கு இதுவே சாட்சி எனலாம்.

இந்த ஊர் ஆங்கிலேயர் ஆட்சியில் உள்ளுரில் இருந்த பட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் அடங்கி ஒடுங்கிக் கிடந்தது. கோவை மாவட்டத்தின் பிற பகுதிகளில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டம் கொளுந்து விட்டெரிந்த நேரத்தில் எந்த விதமான சலனமுமின்றி மெளன பூமியாக இருந்த ஒரே பகுதி தான் இந்த தாராபுரம். இந்த ஊரில் அந்த நிலையில் 1930 ஆண்டு வாக்கில் இந்திய சுதந்திரப் போராட்டச் சுடரை ஒருவர் அவ்வூருக்கு ஏந்தி வந்தார். அதன் பின்னர் அந்த ஊர் போராட்டக்களத்தின் குவி மையம் ஆகிவிட்டது. 

பாலக்காட்டை ஒட்டிய ஒலவக்கோட்டில் பா.நா. துரைசாமிபிள்ளை என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவியின் பெயர் சுந்தரம்மாள் என்பதாகும். அணுகுமுறை, வாக்குதவறாமை, நேர்மை ஆகிய காரணங்களால் பா.நா. துரைசாமிபிள்ளை அவர்கள், தான் நடத்தி வந்த மர வியாபாரத் தொழிலில் பெரிய மனிதர் என்ற நிலையைப் பெற்றிருந்தார். இந்த சீரும் சிறப்பும் பெற்ற குடும்பத்தில் தன்னலன் மறந்து பிறர்நலன் காக்கச்சீறிப்பாயும் புலி ஒன்று உருவானதில் பலருக்கும் ஆச்சரியம்.